Share this

Thursday, 12 April 2018

முதன்முதலில் கண்ட தைரியமான பெண்தானா
வெண்மையின் துருவமாய்
பெண்மையின் உருவமாய்
அழகின் சொரூபமாய்
நிலவின் ஒளியாய்
கலையின் மகள் அல்லவா
முதல் முறை பார்த்ததும் ஏன் ஈர்க்கவில்லை
பல முறை காணாத அவள் முகம்
கண்டும் காணாத அவள் குணம்
காண துடித்த என் மனம்
அவளும் சீண்டவே செய்தாள்
ஏணி வைத்தாலும் எட்டமுடியாத அவள் அழகு
காலத்திற்கேற்ப ஒரு மேல்படிப்பு
கானல் நீராக நான்

No comments:

Post a Comment