என்
சுவாசக்
காற்றே
என்னை
ஒருமுறை
தாலாட்டிட
வருவாயா...!
என்னில்
உன்னே
காண்கிறேன்
உன்னில்
என்னை
தேடுகிறேன்.!
விழியினில்
வெளிச்சமடி...!
அதில்
என்றுமே
என்
தேவதை
நீயடி...!
வருவாயா...!
உயிர்
தருவாயா...!
Share this
Sunday, 6 August 2017
காதல்
Monday, 31 July 2017
நினைவுகள்...!
நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின....!!
அவளுடன் பேச நினைத்த
அந்தக் காதல் வார்த்தைகள்....!!
Friday, 14 July 2017
ஏக்கம்...!
காற்றை
போல
உன்னை
தொடர்வேன்...!
நீ
என்னை
சுவாசிக்க
வேண்டும்
என்பதற்காக
அல்ல...!
என்
நினைவுகள்
என்றும்
உன்னையே
சுற்றி
இருக்க
வேண்டும்
என்பதற்காக...!
Thiru Tks...!
Friday, 7 July 2017
Tuesday, 4 July 2017
தேவதை...!
என் வீட்டில் வீற்றிருக்கும்
நிஜமான நிலவே
நீ தூங்கும் அழகினை
வர்ணிக்க
வார்த்தை கிடைக்காமல்
பார்த்து ரசித்து
கொண்டே
இருக்கிறேன்
பறந்து போய்க்கொண்டே
இருக்கின்றது
நிமிடங்கள்...!
ThiruTks
Monday, 3 July 2017
தேடல்...!
தேடும்பொழுது
கிடைக்கவில்லை
கிடைத்தபோது என்
தேடல் இல்லை...
மறந்து வாழும்
நிலை எனக்கு
உன் நினைவுகள் மட்டும்
மறக்கவில்லை...!
Thiru TKS...!
Tuesday, 27 June 2017
விழிகளில் வானவில்...!
விழிகளில் ஒரு வானவில்
விழிகளில் ஒரு வானவில்...!
விழியசைவில் வியந்து
போனேன்
மொழிகளில்
என்னை
வியர்க்க வைத்தாய்...!
உன் இதழ்களின்
இன்னிசையில்
என்னுள் எத்தனை
எத்தனை
இம்சையடி...!
கன்னி உந்தன்
கவர்ந்துவிட்ட
காதல் தனில்
இழந்துவிட்டேன்
என்னை நானே...!
காதல் பயடம்
விரல் கொண்டு
தீண்டவில்லை...!
என்னவளின் விழி பட்டு
உதிர்ந்து விட்டது...
இந்த காதல்
பூக்கள்...!
Thiru Tks
காதல் பயணம்
சிலரின் பிம்பங்கள் உடையும் போது
நம் மனம்
மட்டுமே
வேதனைப்படுகிறது
அவர்கள் சாதாரணமாக
கடந்து செல்கிறார்கள்...!
Thiru Tks
காதல் பயணம்
தொலை தூரம் நீ இருந்தாலும்
என் சந்தோசத்தை பகிர்ந்திடவும்,கவலையில் தோள் சாய்ந்திடவும், தவறாமல் என்னுள்ளே வருகை தருகிறாய்..
காதல் பயணம்
#என்னவளே
எனது கவலைகளை உனது மடியிலும்..!
உனது மகிழ்வை எனது மார்பிலும்...!!
பகிர்ந்து கொள்கிற வாழக்கை மட்டும் போதும்...#எனக்கு....
காதல் பயணம்
#உன்_கண்களை நேராகப் பார்த்து பேசும் சக்தி
எனக்கு இருந்தால்...
உன்னுடைய அனைத்து குழப்பங்களுக்கும்
என்றோ விடை தெரிந்திருக்கும்....
அன்பு...!
எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள
முடியாத போது!
...உனக்குள் இருக்கும்
என்னை எப்படி
புரிந்து கொள்வாய்...!
குப்பைத்தொட்டி
குப்பைத்தொட்டிக்குள்
அழகாய் பூத்துக்கிடக்கின்றது
என் காதல்...
உன் கை பட்டு கசக்கி எறியபட்ட
என் காதல் காகிதமென..
மெழுகு
மின்சாரம் இல்லாத போது தேடப்படும் மெழுகுவர்த்தியைப் போல..
சிலர் தேவைப் படும்போது மட்டும் தேடப் படுகிறார்கள்...!!!!
பணம்
"பணம்" நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை.,
நிம்மதி தராத அந்த
"பணத்தை"
இழக்க எந்த பணக்காரனும்
தயாராக இல்லை...
-Thiru Tks
வலி...!
நீ பிரிந்து
இருப்பதும்
என்னை
மறந்திருப்பதும்
எனக்கு
வலிக்கவில்லை...!
ஆனால்
உன்னால் மட்டும்
எப்படி
இருக்க முடிகிறது
என்பதுதான்
அதிகமாக
வலிக்கிறது...!
-Thiru Tks
பிரிவு
ஒரேயடியாக நீ என்னை விட்டு பிரிந்தால் என்னால் தாங்க முடியாது என்பதாலோ என்னவோ...
மெல்ல மெல்ல என்னை விட்டு உன்னை தூரமாக்குகிறது இந்த காலம்...
-Thiru TKS
Sunday, 25 June 2017
காதல் பயணம்
❤நிஜத்தோடு அல்ல
❤உன் நிழலோடு
❤உன்னோடு அல்ல
❤உன்
❤நினைவுகளோடு
❤தொடரும்
❤என்
❤காதல் பயணம்
❤நீ
வருவாய்
என...!💔
-Thiru Tks